பொதுமக்களின் குறை தீர்ப்பு என்பது அனைத்து மாவட்ட நிர்வாகத்தின் அன்றாட நிகழ்வுகளில் இரண்டற கலந்த ஒன்று. உண்மையிலேயே மாவட்ட நிர்வாகத்தின் வாயிலாக பொது மக்களின் குறை தீர்ப்பு என்பது ஒரு மாவட்ட நிர்வாகத்தின் திறமையான செயல்பாடுகளை அளந்து நிர்வாகத்தை மேம்படுத்தும் ஒரு செயலாக கருதப்படுகிறது. அனைத்து அரசுத் துறைகளிலும் தகவல் தொழில் நுட்பத்தை கையாளுவது மிக முக்கிய பணி. பொது மக்களின் கோரிக்கையை கையாளுவது மாவட்ட நிர்வாகத்துக்கும் அரசு துறைகளுக்கும் இருக்கும் பணிகளிலேயே அதி முக்கியத்துவம் வாய்ந்தது. பெறப்படும் அனைத்து கோரிக்கைகளையும் ஆவணங்களின் துணைகொண்டு கண்காணிப்பது என்பது காலதாமத மட்டுமின்றி நிர்வாகத்துக்குத் தேவையான குறை தீர்ப்பு புள்ளி விவரங்களை துல்லியமாக பெற முடியாது. இணைய வழி நடைமுறையானது மாவட்ட நிர்வாகத்துக்கு உதவுவது மட்டுமின்றி கோரிக்கை தீர்வையும் எளிதாக்குகிறது .

     மாவட்ட நிர்வாகத்தின் வழியாகப் பெறப்படும் கோரிக்கை தொடர்புடைய துறைக்கு நடவடிக்கைக்காக அனுப்பி வைப்பதுடன் மனுதாரருக்கும் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி துறையானது குறை தீர்க்கும் நடவடிக்கையை முன்னெடுக்கிறது. மாவட்ட நிர்வாகமும் தொடர்ந்து கண்காணிக்கிறது. கோரிக்கை பெற்றவுடன் மாவட்ட நிர்வாகம் கோரிக்கையை தரம் பிரித்து சட்ட சிக்கல் மற்றும் நுண்ணிய கோரிக்கைகளை நன்கு ஆய்வு செய்து குறை தீர்ப்புக்கான ஆலோசனையை சம்பந்தப்பட்ட துறைக்கு வழங்குகிறது.
இணைய வழி கோரிக்கை பதிவு செய்ய மாவட்டத்தை தேர்வு செய்க   
Designed & Developed by National Informatics Centre,
Tamil Nadu State Centre,
E-Mail: nicgdp@tn.nic.in